உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா சிராஜ்? கடுமையாக விளாசிய தமிழக முன்னாள் வீரர்
இந்தியா வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் மோதல் குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சிராஜ் வாக்குவாதம்
அடிலெய்டு டெஸ்டில் டிராவிஸ் ஹெட், முகமது சிராஜ் வாக்குவாதம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நடத்தை விதியை மீறியதாக இருவரையும் கண்டித்த ஐசிசி, அவர்களுக்கு அபராதம் விதித்தது.
இந்த நிலையில், சிராஜை கடுமையாக விளாசி தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் விளாசல்
அவர் கூறுகையில், "ஹெட் நம்முடைய பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி அடித்து நொறுக்கியுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக இப்படி நடந்து கொண்ட சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா? என்ன செய்கிறீர்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா?
அவர் உங்களை வலது, இடது, மையம் உட்பட அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினார். 140 ஓட்டங்கள் அடித்த ஒரு துடுப்பாட்ட வீரருக்கு நீங்கள் பாராட்டு கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி அனுப்புகிறீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |