ரக்ஷா பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த அக்கா! நெகிழ்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ரக்ஷா பந்தனையொட்டி சகோதரனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று கொண்டாடப்படும்.
இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.
சிறுநீரகம் தானம்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் தங்கர் (48). இவரது சகோதரி ஷீலாபாய். இதில், சகோதரர் ஓம்பிரகாஷ் தங்கர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சிறுநீரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.
இவருக்கு அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே இவரது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் நாள் பரிசாக தனது தம்பிக்கு தன்னுடைய சிறுநீரகத்தை கொடுப்பதாக ஷீலாபாய் கூறியதுடன், சிகிச்சையில் இருக்கும் அவரது கையில் ராக்கி கயிறை கட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஓம்பிரகாஷ் தங்கருக்கு வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.
இதனால் குஜராத் மாநிலத்தில், ஓம்பிரகாஷ் தங்கர் மற்றும் ஷீலாபாய் ஆகிய இருவரும் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர். சகோதரியின் இந்த மனிதாபிமான இந்த செயல் பார்ப்பவர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |