ஏவுகணைத்தாக்குதலில் கொல்லப்பட்ட அக்கா... கண்ணீர் விட்டுக் கதறும் சிறுவன்: கலங்கவைக்கும் புகைப்படம்
உக்ரைன் நகரமொன்றில், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தன் அக்காவின் சவப்பெட்டியின் அருகே கண்ணீர் விட்டுக் கதறும் 6 வயது சிறுவனைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி மனதை கலங்கவைத்துள்ளன.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்
வெள்ளிக்கிழமை, உக்ரைன் நகரமான Umanஇல் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின்மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், சுமார் 23 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆறு சிறுவர்களும் அடக்கம்.
Sky News
இந்த துயரச் செய்தியை, உக்ரைன் உள்துறை அமைச்சரான Ihor Klymenko தெரிவித்துள்ளார்.
Sky News
தன் அக்காவின் சவப்பெட்டியின் அருகே கண்ணீர் விட்டுக் கதறும் 6 வயது சிறுவன்
அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட Sofia Shulha என்னும் 12 வயது சிறுமியின் தம்பியான Mykhayl Shulha, தன் அக்காவின் சவப்பெட்டியின் அருகே நின்றபடி கண்ணீர் விட்டுக் கதறும் புகைப்படங்கள் வெளியாகி மனதை கலங்கச் செய்துள்ளன.
Sky News
அதே தாக்குதலில் கொல்லப்பட்ட Pysarev Kiriusha (17) என்னும் சிறுவனின் இறுதிச்சடங்குக்காகச் செல்லும் உறவினர்களும், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Sky News