20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சொந்த அக்காவை வன்புணர்வு செய்து வந்த தம்பி! கதறி அழுத பரிதாப பின்னணி
தமிழகத்தில் சொந்த அக்காவையே தம்பி, 20 வருடங்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 48 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு 40 வயது மதிக்கத்தக்க தம்பி ஒருவர் உள்ளார். தாய், அக்கா, தம்பி என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தம்பி சொந்த அக்கா என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இப்படி பல ஆண்டுகளாக தம்பியின் பாலியல் தொல்லையால் தவித்து அவர், ஒரு கட்டத்தில் அவரின் தொல்லை அதிகரித்ததால், உடனடியாக இது குறித்து மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில், தம்பியால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்து கதறி அழுதுள்ளார்.
அதில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 20 வருடங்களாக தாயுடன் தனியே வசித்து வருகிறேன். அதே வீட்டில் திருமணமாகாத தம்பி அண்ணாமலை (40), வசித்து வருகிறார்.
அவர் அடிக்கடி மதுபோதையில், என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இது குறித்து பொலிசார் உடனடியாக மேற்கொண்ட விசாரணையில், இது உண்மை என்பது தெரியவந்ததால், அண்ணாமலை மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.