தங்களுக்கு பிடித்த உணவு இல்லாததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சகோதரிகள்!
அமெரிக்காவின் வௌவடோசா(Wauwatosa) நகரில் இரட்டை சகோதரிகள் ஆர்டர் செய்த உணவு பட்டியலில் 3 டாலர் மதிப்புள்ள ஹாம்பர்கர் இல்லாததால் அந்தோணி ரொட்ரிகோஸ் (26) என்ற ஹோட்டல் ஊழியர் சூடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வௌவடோசா(Wauwatosa) நகரில் பிரேண்டா(Breanta) மற்றும் ப்ரயன்னா(Bryanna) என்ற சகோதரிகள் விஸ்கான்சின் என்ற ஹோட்டலில் தங்களின் இரவு உணவை ஆர்டர் செய்துள்ளனர்.
இதையடுத்து வௌவடோசா(Wauwatosa) நகரில் ஜார்ஜ் என்ற பகுதியில் அந்த உணவுகளை வழங்குவதற்காக அந்த ஹோட்டலின் ஊழியர் அந்தோணி ரொட்ரிகோஸ் (26) என்ற நபர் சென்றுள்ளார்.
அவரிடம், பிரேண்டா(Breanta) மற்றும் ப்ரயன்னா(Bryanna) என்ற சகோதரிகள் தாங்கள் ஆர்டர் செய்த உணவில் ஹாம்பர்கர் இல்லை எனக் கூறி உணவுக்கான பணத்தை தர மறுத்துள்ளனர்.
ரொட்ரிகோஸியும் நீங்கள் பணம் தரவில்லை என்றால் இதை நானே எடுத்து செல்கிறேன் என கூறி, அந்த உணவு பொட்டலங்களை தூக்கி எறிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள் அவரை தாக்கி அவரது கழுத்து பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்தநிலையில் உயிருக்கு போராடிய ரொட்ரிகோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
மேலும் அவரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு சகோதரிகளுக்கும் 100,000 டாலருடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.