மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.., தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்.
சீதாராம் யெச்சூரி மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
அவர், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அவரது நுரையீரலில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19 -ம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை சுவாச நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக அவரது உடல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.
இவரது உடலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |