தடை விதிக்கப்பட்டதால் ரஷ்ய கோடீஸ்வரருக்கு ஏற்பட்டுள்ள நிலை: அவர் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட்டன.
அந்த தடைகளால் தங்கள் சொத்துக்களை பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளார்கள் ரஷ்ய கோடீஸ்வரர்கள் பலர்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வாழும் ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை எடுக்க முடியாததால், ஏழைகளுக்கு சுவிஸ் அரசு வழங்கும் உதவித் தொகையையாவது தனக்குக் கொடுக்கவேண்டும் என கேட்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
சுவிஸ் குடிமகனான அந்த ரஷ்யக் கோடீஸ்வரர், சீக்கிரத்தில் மளிகைப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை தனக்கு உருவாகிவிடும் என்று கூறியுள்ளார்.
ஆனால், ஜெனீவாவிலுள்ள சமூக உதவிகள் வழங்கும் அலுவலகமோ, அந்த கோடீஸ்வரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டது. அவருக்கு ரியல் எஸ்டேட் உட்பட வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது அந்த அலுவலகம்.
சமூக உதவி என்பது, தங்கள் செலவுகளை சந்திக்க இயலாதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிதானேயொழிய, சர்வதேசத் தடைகள் காரணமாக பணப் பிரச்சைனைகளை சந்திப்பவர்களுக்கானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.