எனக்கு ஆண்மை இல்லை... நான் எப்படி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும்? சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை என சிபிசிஐடி பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடன சாமியார் என்று அழைக்கப்படும் சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில், அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 3 போக்சோ வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது.
மாணவிகளை மிரட்டி அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. பொலிசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி பொலிசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும்? சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனது ஆண்மை இல்லை என்பது தெரியவந்ததாகவும் சிவசங்கர் பாபா கூறியுள்ளார்.
இதையடுத்து மகன் மற்றும் மகள் சிவசங்கர் பாபாவுக்கு இருக்கும் போது ஆண்மையற்றவர் என அவர் எப்படி கூற முடியும் என அவர் ஜாமீன் மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதும் தற்போது தெரியவந்துள்ளது.