இனி வாழ முடியாது! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் குடித்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண பிரச்சனையால் விபரீத முடிவு
மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் கிஷோர் ஜாதவ் (40). ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவருக்கு சீதா (35) என்ற மனைவியும், காஞ்சன் (15), புர்வா (8), அன்னு (10), அபய் (12) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்தனர். இதன் காரணமாக பெரும் கடனில் சிக்கி தவித்தனர், வறுமையும் வாட்ட துவங்கியதால் இனியும் உயிர் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனையடுத்து குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்ள கிஷோர் முடிவு செய்தார், அதன்படி பாலில் விஷல் கலந்து அவரும், சீதாவும் குடித்ததோடு நான்கு குழந்தைகளுக்கு கொடுத்தனர்.
oneindia
சிறுவன் மரணம்
பின்னர் ஆறு பேரும் சுயநினைவை இழந்து கீழே சரிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் புர்வா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க மற்ற 3 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் உள்ளனர். கிஷோர் மற்றும் சீதா இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ndtv