பாடசாலையில் மாணவர்களுடன் உறவுகொண்ட 6 பெண் ஆசிரியர்கள் கைது
அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாக, 6 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை வன்புணர்வு செய்த ஆசிரியைகள்
Danvilleவை சேர்ந்த 38 வயதான ஆசிரியை எலன் ஷெல் என்பவர் பாடசாலை மாணவரை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மூன்றாம் நிலை வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்டது. அவர் இருமுறை 16 வயது சிறுவர்களுடன் மூன்று முறை உடலுறவு கொண்டதாக தெரிய வந்துள்ளது.
At least 6 female teachers arrested for sexual misconduct with students over two days across US https://t.co/IprZP0UOXB #midufinga #breakingnews #video pic.twitter.com/WIXk4OFiDR
— KING617 (@Midu_Life) April 15, 2023
ஆறு ஆசிரியைகள் கைது
கைது செய்யப்பட்ட எலன் கர்ரார்ட் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேபோல் 32 வயது ஹீதர் ஹேர் என்ற ஆசிரியையும், ஓக்லஹோமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக் (26) என்ற ஆசிரியையும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிங்கன் கவுன்டியில் 15 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை ஒருவரும், பாடசாலை கட்டிடத்திற்குள் மாணவர் ஒருவரை உறவில் ஈடுபடுத்திய எம்மா டெலானி ஹான்காக் என்ற ஆசிரியை ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 36 வயது கிறிஸ்டன் காண்ட் என்ற ஆசிரியை பதின்பருவ மாணவருடன் ஐந்து மறை, பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் உடலுறவு கொண்டுள்ளதாக கைதாகினார்.
இவ்வாறாக இரண்டு நாட்களில் மட்டும் பதின்பருவ மாணவர்களுடன் உறவு கொண்டதாக 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.