ஆறு மாதங்களில் ஆறு இளம்பெண்கள் மாயம்: அதிகாரிகளுக்கு உருவாகியுள்ள சந்தேகம்
அமெரிக்க நகரமொன்றில், ஆறு மாதங்களில் ஆறு இளம்பெண்கள் மாயமான நிலையில், அவர்கள் அனைவருமே உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆறு மாதங்களில் ஆறு இளம்பெண்கள்
அமெரிக்காவிலுள்ள Oregon மாகாணத்தில் அமைந்துள்ள Portland என்னும் பகுதியில், மாயமான ஆறு இளம்பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
Image: Portland Police Bureau
மார்ச் மாதம், 22 வயதான Ashley Real என்னும் இளம்பெண் மாயமான நிலையில், கடந்த மாதம், அதாவது மே மாதம் 7ஆம் திகதி, Eagle Creek என்னுமிடத்தில் அவரது உயிரற்ற உடல் கிடைத்த விடயம் கவனத்தை ஈர்த்தது.
பொலிசாருக்கு உருவாகியுள்ள சந்தேகம்
விடயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் துவங்கி, இதே பகுதியில் ஆறு இளம்பெண்கள் மாயமாகியுள்ளார்கள், பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
Image: Facebook / Diana Allen
2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி Kristin Smith என்னும் இளம்பெண் மாயமானார். அவர், 2023ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 19ஆம் திகதி உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம், Ashley Real என்னும் இளம்பெண் மாயமான நிலையில், மே மாதம் 7ஆம் திகதி அவரது உயிரற்ற உடல் கிடைத்தது.
Image: Portland Police Department
பின்னர், ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி JoAnna Speaks என்னும் பெண்ணின் உயிரற்ற உடல் கிடைத்துள்ளது. 24ஆம் திகதி, Charity Perry என்னும் பெண்ணின் உயிரற்ற உடல் கிடைத்துள்ளது. அதே நாளில், Kristin Smithஇன் உடல் கிடைத்த இடத்துக்கு சற்று தொலைவில், அடையாளம் தெரியாத வேறொரு இளம்பெண்ணின் உடலும் கிடைத்துள்ளது.
Image: Multnomah County Medical Examiner
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி, Bridget Webster என்னும் இளம்பெண்ணின் உடலும், மே மாதம் 7ஆம் திகதி, ஏற்கனவே குறிப்பிட்ட இளம்பெண்ணான Ashley Realஇன் உடலும் கிடைத்தன.
Image: gofundme / Ariel Hamby and Robyn Speaks
ஆக, ஆறு மாதங்களுக்குள் ஆறு இளம்பெண்கள் மாயமாகி, பின்னர் அவர்கள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சீரியல் கில்லர் யாராவது நடமாடுகிறார்களா என்னும் சந்தேகம் பொலிசாருக்கு எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
Image: The Polk County Sheriff's Office