நூற்றாண்டின் விவாகரத்து - முன்னாள் மனைவிக்கு ரூ.6,245 கோடி வழங்க உள்ள தொழிலதிபர்
தென் கொரியாவில் முன்னாள் மனைவிக்கு விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி
தென் கொரியாவில், 1953 ஆம் ஆண்டில் ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கி, செமிகண்டக்டர், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி நாட்டின் 2வது பெரிய கூட்டு நிறுவனமாக உள்ளது SK குழுமம் ஆகும்.

இதன் சேர்மன் சேய் டே-வோன்(Chey Tae-won), கடந்த 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ டே-வூ என்பவரின் மகளான ரோ சோ-யோங்(Roh Soh-yeong) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதி 2011 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.
இந்த விவாகரத்து சொத்துப் பங்கீட்டின் ஒரு பகுதியாக 944 பில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.6,245 கோடி) ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று தென் கொரியா மேல்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சியோல் உயர் நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் வழங்கப்பட்ட 1.38 டிரில்லியன் வோன் வழங்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சோ-யோங்கின் தந்தை ரோ டே-வூ கள்ளப் பண நிதியிலிருந்து சேய்க்கு 30 பில்லியன் வோன் கொடுத்தது சட்டவிரோதம் என்பதால் அதைத் தம்பதியரின் சொத்துக்களின் ஒரு பகுதியாகக் கருத முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
ஆனால், ரோவும் இல்லறம், பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் SK குழுமம் தொடர்பான வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பங்களித்தார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ரோ அந்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாகப் பணமாகப் பெற வேண்டும் என்றும், சே தனது SK பங்குகளின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருதரப்பில் யாரேனும் ஒருவர் மேல்முறையீடு செய்தாலும், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்.
இந்த விவாகரத்து, தென் கொரியாவில் "நூற்றாண்டின் விவாகரத்து" என இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |