நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு: புடவையால் தெரியவந்த உண்மை
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது.
நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு
உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்பட்ட அந்த எலும்புக்கூடு யாருக்கு சொந்தமானது என அடையாளம் காணுவது அதிகாரிகளுக்கு கடினமான விடயமாக இருந்துள்ளது.
இந்நிலையில், அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புடவையால், அந்த உடல் அந்தப் பகுதியில் வாழும் பீதாம்பர் என்னும் நபரின் மனைவியான பூனம் (30) என்னும் பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
என்றாலும், அடையாளம் காண்பதில் எந்த தவறும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த உடல் பாகங்கள் DNA பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பூனமுக்கும் அவரது கணவரான பீதாம்பருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தன் மனைவி காணாமல் போனதாக அவர் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |