பூங்காவில் ஜாக்கிங் சென்றபோது தடுக்கி விழுந்த நபர்! நியூயோர்க் பொலிசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் உள்ள புதரில் சிதைந்த உடல் ஒன்று எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு நபரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மெட்ரோபொலிட்டன் ஆர்ட் மியூசியத்தின் பின்புறம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில், கூடாரம் ஒன்று இருப்பதைக் கண்ட ஜாக்கிங் சென்ற நபர் ஒருவர் தெரியாமல் தடுக்கி ஒரு புதரில் மீது விழுந்துள்ளார். ஆனால் அவர் ஒரு எலும்புக்கூட்டின் மேல் விழுந்துள்ளார் அவர் எழுந்து நின்று பார்க்கும்போது தான் தெரிந்துள்ளது.
உடனடியாக பூங்கா துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் 79-வது தெரு மற்றும் ஈஸ்ட் டிரைவில் மதியம் 12:30 மணிக்கு முன்பு நடந்தது.
நியூயார்க் காவல் துறையின் கூற்றுப்படி, எச்சங்கள் "மிகவும் சிதைந்த நிலையில்" இருப்பதாகவும், பெரும்பாலும் எலும்புக்கூடுகளாகவும் இருப்பதாகவும் நகர மருத்துவ பரிசோதகர் கூறியதாக தெரிவித்தனர்.
அந்த இடத்தில் கூடாரம் எவ்வளவு நாட்களாக இருந்தது அல்லது அந்த நபர் எப்போது இறந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியாததால் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.