முகத்திற்கு பொலிவை தரும் வெற்றிலை! எப்படி பயன்படுத்தணும்?
வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன.
சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்து கொண்டால் பல நன்மைகளை பெறலாம்.
முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் வெற்றிலையில் உள்ளது.
வெற்றிலையானது சருமத்தை மென்மையாக்கி, முகத்திற்கு ஒருவித பொலிவை இயற்கையாகவே தருகிறது.
பயன்படுத்தும் முறைகள்
- வெற்றிலையை மிக்ஸியில் நன்கு மைய அரைக்கவும்.
- பின்பு அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
- இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடவும்.
- பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும்.
கிடைக்கும் நன்மைகள்
வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் கட்டிகள் சருமத்தில் ஏற்படாமல் தடுக்கின்றன. பருவால் முகம் சிவப்பாக மாறும் பிரச்சனையையும் வெற்றிலை சரிசெய்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வெற்றிலை, வயதான தோற்றத்தை தரும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. வெற்றிலையில் சரும பொலிவுக்கு உதவும் கலவைகள் உள்ளன.
வெற்றிலையில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
வெயிலில் சென்றால் திடீரென்று சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை சரிசெய்ய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சருமத்திற்கு ஃபிரஷ் லுக்கை தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |