ஏமாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ... வழக்கு தொடர்ந்த லண்டன் பிரபலம்
போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது இந்திய வம்சாவளி ஒப்பனை மருத்துவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிகிச்சைகளுக்கான கட்டணம்
Dr Rosh என அறியப்படும் மருத்துவர் ரோஷன் ரவீந்திரன் என்பவரே ரொனால்டோ மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர ரொனால்டோ, 2021 மற்றும் 2022ல் ஓல்ட் டிராஃபோர்டில் இருந்தபோது தாம் அளித்த சிகிச்சைகளுக்கான கட்டணத்தை இன்னமும் தமக்கு செலுத்தவில்லை என்றே மருத்துவர் ரோஷன் ரவீந்திரன் கூறுகிறார்.
முன்னாள் இருதயநோய் நிபுணரான ரோஷன் ரவீந்திரன் தோல் பராமரிப்பு மற்றும் புருவம் ஆகியவற்றிலும் நிபுணராக உள்ளார். புகார் மனுவில் ரொனால்டோவின் துணைவி குறித்து குறிப்பிடவில்லை என்றாலும், ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தாம் சிகிச்சை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொருட்டு தமக்கு அவர் 40,000 பவுண்டுகள் கட்டணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில், பலராலும் மிகவும் மதிக்கக் கூடியவர் Dr Rosh.
பலரின் முதன்மையான தெரிவு
இவரது சேவையை பல முதன்மையான அரசியல் பிரபலங்கள், அரச குடும்பத்து உறுப்பினர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், botox மற்றும் fillers சிகிச்சையில் பிரபலங்கள் பலரின் முதன்மையான தெரிவு Dr Rosh என்றே கூறப்படுகிறது. தற்போது சவுதி அரேபிய அணி ஒன்றில் விளையாடும் ரொனால்டொ ஆண்டுக்கு 173 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |