சரும சுருக்கமா? இதனை எளிய முறையில் போக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!
சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால், பின் சருமத்தில் சுருக்கங்கள், வறட்சி போன்றவை ஏற்படும். மேலும் இத்தகைய பிரச்சனைக்கு கடுமையான சூரியக்கதிர்களும், சுற்றுச்சூழலும் தான் காரணம்.
ஆகவே அத்தகைய பிரச்சனை இல்லாமல், முகம் பொலிவோடும், முதுமைத் தோற்றத்தை தரும் சுருக்கம் இல்லாமலும் இருப்பதற்கு, உணவுகளை உண்பதோடு, அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு பராமரிக்க வேண்டும்.
இதற்கு பீட்ரூட் பெரிதும் உதவி புரிகின்றது. இதில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இது உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது. அத்தகைய பீட்ரூட்டை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் சாறு: 2 டேபிள் ஸ்பூன்
- பாதாம் பால் - கால் டீஸ்பூன்
- பால்- ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும்.
சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.
டிப்ஸ் 2
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் - 1 துண்டு
- தேன் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
பீட்ரூட்டை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தேனை கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். முகப்பரு இல்லாமல் பிரகாசமாகவும், இளமையாகவும் மிளிரும் சருமத்தை பெறுவதற்கு இந்த பீட்ரூட் பேஸ் பேக் உதவும்