புதிய Skoda Kylaq இந்தியாவில் அறிமுகம்.! விலை, டெலிவரி திகதி அறிவிப்பு
ஸ்கோடா (Skoda) நிறுவனம் தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவி Kylaq-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் வெளியிட்ட மிகச்சிறிய எஸ்யூவி இதுவாகும்.
இந்த Skoda Kylaq-ன் வடிவமைப்பு Kushaq காரிடமிருந்து ஈர்க்கப்பட்டது.
இந்த காரின் கேபின் சுற்றிலும் சில்வர் மற்றும் குரோம் அக்ஸ்ன்டுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிற தீம் பெறுகிறது.
ஸ்கோடா கைலாக் காரில் 10.1-inch touchscreen, ventilated front seats மற்றும் electric sunroof உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இது தவிர, பாதுகாப்பிற்காக, இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவியில் 6 airbags (Standard), electronic stability control மற்றும் traction control போன்ற அம்சங்கள் உள்ளன.
Skoda Kylaq நான்கு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்Classic, Signature, Signature Plus மற்றும் Prestige ஆகியவை அடங்கும்.
இதன் ஆரம்ப விலை ரூ.7.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் இந்த காரின் வகைகளுக்கான விலை பட்டியலை பகிரவில்லை. குளோபல் மொபிலிட்டி ஷோ 2025-இல் அனைத்து விலைகளும் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெய்லாக் எஸ்யூவிக்கான முன்பதிவு டிசம்பர் 2-ஆம் திகதி முதல் தொடங்கும், அதே நேரத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் 27 ஜனவரி 2025 முதல் டெலிவரிகள் கிடைக்கும்.
இது Tata Nexon, Maruti Brezza, Mahindra XUV 3XO, Nissan Magnite மற்றும் Renault Kiger ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இது தவிர, Maruti Fronx மற்றும் Toyota Taisor போன்ற சப்-4 மீட்டர் கிராஸ்ஓவர்களுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Skoda Kylaq Launched in India, Skoda Kylaq price, Skoda Kylaq booking date, Skoda Kylaq delivery date