இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா புதிய மாடல்
Skoda Slavia Facelift launch in India: ஸ்கோடா ஸ்லாவியாவின் புதிய facelift மாடலை டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
ஸ்கோடா இந்தியா தனது பிரபலமான செடான் கார் ஸ்லாவியாவின் புதிய facelift மாடலை ஆகஸ்ட் 18, 2026 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றங்கள்:
புதிய மாடலில் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் புதிய கிரில், அதிக குரோம் அலங்காரம், மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லாம்புகள் மற்றும் LED லைட்டிங் சிக்னேச்சர்கள் இடம்பெற்றுள்ளன.
பம்பர் மற்றும் fog-lamp housing-களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் புதிய 5-spoke அலாய் வீல்கள் அறிமுகமாகின்றன. பின்புறத்தில் sequential turn indicators கொண்ட tail lamps இடம்பெறுகின்றன.
உட்புற அமைப்பில் 10.25-inch டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, அதே அளவிலான infotainment screen, wireless charging, automatic climate control, rear AC vents மற்றும் 8-speaker audio system ஆகியவை இடம்பெறுகின்றன. single-pane sunroof, TPMS, front parking sensors போன்ற வசதிகளும் தொடர்கின்றன.
எஞ்சின் விருப்பங்களில் மாற்றம் இல்லை. 1.0 லிட்டர் TSI (116 PS, 178 Nm) மற்றும் 1.5 லிட்டர் TSI (150 PS, 250 Nm) என இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் மாடல் 6-speed manual மற்றும் புதிய 8-speed automatic transmission-இல் கிடைக்கிறது. 1.5 லிட்டர் மாடல் 7-speed DSG-யுடன் வருகிறது.
பாதுகாப்பு அம்சங்கள்:
6 airbags, ABS, ESC, TPMS, ISOFIX mounts ஆகியவை தொடர்கின்றன. Global NCAP-இல் 5-star மதிப்பீடு பெற்றுள்ளதால், புதிய மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை:
தற்போதைய ரூ.10 லட்சம் - ரூ.18.19 லட்சம் ex-showroom வரம்பை விட சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. புதிய ஸ்லாவியா, Hyundai Verna, Volkswagen Virtus, Honda City ஆகியவற்றுடன் போட்டியிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |