தென் கொரியாவில் எதிர்கட்சி தலைவரை கத்தியால் கழுத்தில் குத்திய மர்ம நபர்: மருத்துவமனையில் அனுமதி
தென் கொரியாவின் எதிர்கட்சி தலைவர் லீ ஜே மியாங் மர்ம நபர் ஒருவரால் கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய எதிர்கட்சி தலைவர்
தென்கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை லீ ஜே மியாங் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது தென்கொரியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே மியாங்-யை மர்ம நபர் ஒருவர் கத்தியால் கழுத்தில் குத்தி தாக்கியுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, சம்பவ இடத்திலேயே தரையில் விழுந்த லீ ஜே மியாங் சுயநினைவுடன் காணப்பட்டார், ஆனால் அவரது தற்போதைய மருத்துவ நிலையை என்னவென்று தெரியவில்லை.
இதற்கிடையில் லீ ஜே மியாங்-யை தாக்கிய மர்ம நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லீ ஜே மியாங் தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான புகைப்படங்களில், லீ ஜே கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்து உள்ளார், அவரை சுற்றியுள்ள நபர்கள் லீ ஜே அவர்களின் கழுத்தின் பக்கவாட்டில் கைக்குட்டையை வைத்து அழுத்தி பிடித்துள்ளனர்.
AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
south korea, south korea opposition leader, south korea opposition leader Lee Jae-myung