விமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் திணறிய வீரர் தரையில் விழுந்து மரணம்
அவுஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் போட்டியில் கலந்துக்கொண்ட வீரர் தரையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கைடிவிங் போட்டியின் ஒரு பகுதியாக பெர்த் நகரின் ஜூரியன் பே பகுதி மீது விமானத்தில் இருந்து குதித்த 30 வயதான வீரரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2:30 மணிக்கு இடையே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர் விமானத்திலிருந்து குதித்த பின்னர் அவருடைய பாராசூட் திறக்காததால் தரையில் விழுந்து சம்பவயிடத்திலேயே இறந்தள்ளார்.
இறந்த வீரர் இதுவரை 6,000 ஸ்கை டைவிங்கை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய பாராசூட் கூட்டமைப்பு ஆகியவை விசாரணை மேற்கொள்ளும் என்றும், உள்ளூர் காவல்துறையினரும் மரண குறித்த அறிக்கையைத் சமர்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.