இறுதிவரை போராடி சதம் விளாசிய இலங்கை வீரர்!
ACC ஆசிய கோப்பை தொடரில் இலங்கை ஏ அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியுற்றது.
ரியாஸ் ஹசன் 82 ஓட்டங்கள்
கொழுப்பில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. ரியாஸ் ஹசன் 82 ஓட்டங்களும், நூர் அலி ஜட்ரான் 53 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கையின் சமிகா கருணரத்னே 3 விக்கெட்டுகளும், லஹிரு சமரகூன், துஷன் ஹேமந்தா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
What a brilliant display of bowling by Chamika Karunaratne as he led the bowlers to restrict Afghanistan to 252/9! ???#SLvAFG #ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/wNBRI3ZNVK
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 15, 2023
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் கீப்பர் மினோத் பனுகா மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய துஷன் ஹேமந்தா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மினோத் பனுகா சதம்
இதனால் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் என தடுமாறியது. எனினும் தனியாளாய் போராடிய மினோத் பனுகா சதம் விளாசினார்.
? Witnessing an Epic Battle! ? Minod Bhanuka delivers a remarkable century ?!#SLvAFG #ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/zFza17VHC7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 15, 2023
அணியின் ஸ்கோர் 229 ஆக இருந்தபோது மினோத் 103 பந்துகளில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டைத் தொடர்ந்து லஹிரு சமரகூன் 16 ஓட்டங்களில் அவுட் ஆனதால், இலங்கை அணி 241 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆகி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
A fighting knock by Minod Bhanuka ??#SLvAFG #ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/lI4KLH2gZ6
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 15, 2023
ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் முகமது இப்ராஹிம் 4 விக்கெட்டுகளும், முகமது சலீம் மற்றும் ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (Sri lanka Cricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |