இலங்கை வீரரின் மிரட்டல் சதத்தினால் அபார வெற்றி
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபார பந்துவீச்சு
கண்டியில் இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 43.2 ஓவரில் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கோட்ஸியே 77 ஓட்டங்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 59 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கையின் தில்ஷன் மதுஷன்கா 4 விக்கெட்டுகளும், லியானகே மற்றும் சஹன் அரச்சிகே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷன் மதுஷ்கா நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
????? Unbeaten 107 from Nishan Madushka leads Sri Lanka 'A' team to a comprehensive seven-wicket victory against South Africa 'A' team! ?#SLvSA #SLATeam pic.twitter.com/6jXIpeTVEb
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 6, 2023
இலங்கை வெற்றி
எனினும் மதுஷ்கா, அரச்சிகே ஜோடியின் மூலம் இலங்கை அணி 29 ஓவர்களிலேயே 178 ஓட்டங்கள் எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது. நிஷன் மதுஷ்கா 85 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்களும், அரச்சிகே 55 பந்துகளில் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை ஏ அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி 8ஆம் திகதி நடக்கிறது.
?Sahan Arachchige smashes a brilliant knock of 50 runs off just 55 balls, including 6 boundaries! ?#SLvSA #SLATeam pic.twitter.com/HjocScVvur
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 6, 2023
Dilshan Madusanka dominates South Africa 'A' team with four top-order wickets under 20 runs! ??#SLvSA #SLATeam pic.twitter.com/IF5qkBfcUX
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 6, 2023