சதம் விளாசிய இருவர்! டெஸ்ட் கோப்பையை தட்டித் தூக்கிய இலங்கை
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை ஏ அணி கைப்பற்றியது.
இரண்டாவது டெஸ்ட்
தம்புல்லாவில் நடந்த இலங்கை ஏ - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 290 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 294 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து 4 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 83.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
? Minod Bhanuka played a sensational knock, smashing 10 boundaries and five sixes! ?⚡️#SLvSA #SLATeam pic.twitter.com/P87oGnokpm
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 22, 2023
இருவர் சதம் விளாசல்
மினோத் பனுகா - பசிந்து சூரியபாந்தரா கூட்டணி 254 குவித்தது. இதில் பனுகா 130 ஓட்டங்களும், சூரியபாந்தரா ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு 332 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
? Pasindu Sooriyabandara knocks a brilliant century against South Africa 'A'! A batting star ? in the making! ??#SLvSA #SLATeam pic.twitter.com/QZlImrYFOF
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 22, 2023
இதனால் போட்டி டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக பிரீட்ஸ் 38 ஓட்டங்களும், சோர்சி 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரமா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.
The second and final four-day match ends in a draw as Sri Lanka 'A' wins the series 1-0 ??#SLvSA #SLATeam pic.twitter.com/iTH7JtwWKV
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 22, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |