இவ்வளவு மோசமான எதிரணியை பார்த்ததே இல்லை! TIMED OUT சர்ச்சையில் இலங்கை வீரர் மேத்யூஸ் காட்டம்
என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான எதிரணியை பார்த்தது இல்லை என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காட்டமாக பதிலளித்துள்ளார்.
டைம் அவுட் விவகாரம்
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 146 ஆண்டுகால உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் அவுட் ஆகாத முறையில், அதாவது “டைம்ட் அவுட்” அடிப்படையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியுள்ளார்.
உடைந்த ஹெல்மட்டை மாற்றி கொள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையீடு செய்து “டைம்ட் அவுட்”(TIMED OUT) அடிப்படையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை ஆட்டமிழக்க செய்தார்.
இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காட்டம்
இந்நிலையில் தன்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான ஒரு எதிரணியை நான் பார்த்ததே இல்லை என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காட்டமாக பதிலளித்துள்ளார்.
நான் 2 நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வந்துவிட்டேன் ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
? Angelo Mathews: "I have played for 15 years but I cannot see any team going down below this level that Bangladesh went today"#BANvsSL | #AngeloMathewspic.twitter.com/6dqegWBcaK
— Haroon ?? (@HaroonM33120350) November 6, 2023
மேலும் வங்கதேச அணி மற்றும் அதன் கேப்டன் ஷகிப்பின் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது என்றும், ஷகீப் மீது இருந்த அத்தனை மரியாதையும் சுத்தமாக போய்விட்டதாகவும் இலங்கை வீரர் மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |