சூப்பர் சிக்ஸில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை! தீக்ஷணா அபார பந்துவீச்சு
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
அணியை மீட்ட தனஞ்செய டி சில்வா
உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் துடுப்பாடிய இலங்கை 47.4 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தொடக்க வீரர்கள் சொதப்பவே, தனஞ்செய டி சில்வா 111 பண்துகில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் குவித்து அணியை காப்பற்றினார். வான் பீக், பஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளும், சஹிப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
?? Fighting knock by Dhananjaya de Silva! He scores 93 runs off 111 balls.#SLvNED #CWC23 pic.twitter.com/z1H4enwWRr
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 30, 2023
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து 11 ஓட்டங்களுக்கு தொடக்க வீரர்களை இழந்தது. எனினும் பர்ரேஸி, லீடே இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அரைசதம் அடித்த பர்ரேஸி 52 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து தீக்ஷணா பந்துவீச்சில் லீடே 41 ஓட்டங்களிலும், சஹிப் மற்றும் பீக் சொற்ப ஓட்டங்களிலும் வெளியேறினர்.
? Maheesh Theekshana spins his magic once again, taking 3️⃣ crucial wickets! ✨#SLvNED #CWC23 #LionsRoar pic.twitter.com/Usbrnrfgfp
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 30, 2023
சுருண்ட நெதர்லாந்து
கடைசி இரண்டு விக்கெட்டுகளை ஹசரங்கா, ஷனகா கைப்பற்ற, நெதர்லாந்து 40 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது. இறுதிவரை போராடிய கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்கள் குவித்தார்.
Getty Images
இலங்கை தரப்பில் தீக்ஷணா 3 விக்கெட்டுகளும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இலங்கை அணி அடுத்ததாக சூலை 2ஆம் திகதி ஜிம்பாப்பே அணியை எதிர்கொள்கிறது.
Sri Lanka keeps the winning streak going in the Super Six stage with an important victory!???#SLvNED #CWC23 #LionsRoar pic.twitter.com/aRPujhiPNK
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 30, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |