கிரிப்டோகரன்சி வழங்குநர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
கிரிப்டோ நாணய சேவை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மத்திய வங்கி நடவடிக்கை
கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி தொடங்கியுள்ளது.
கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து எழுத்து வடிவில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் எதிர்காலத்தில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்த கிரிப்டோகரன்சிகள் உலகளவில் பண மோசடி தொடர்பான நடவடிக்கைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் நோக்கில் கிரிப்டோகரன்சி வழங்குநர்கள் தங்கள் சேவைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற முறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |