சர்ச்சையான TIMED OUT விவகாரம்: ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்
நேற்றைய போட்டியில் டைம் அவுட் முறையில் விக்கெட்டை தரப்பட்டதை எதிர்த்து இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையான டைம் அவுட் விவகாரம்
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 146 ஆண்டுகால உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் அவுட் ஆகாத முறையில், அதாவது “டைம்ட் அவுட்” அடிப்படையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியுள்ளார்.
ஹெல்மட்டை மாற்றி கொள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையீடு செய்து “டைம்ட் அவுட்”(TIMED OUT) அடிப்படையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை ஆட்டமிழக்க செய்தார்.
பின் போட்டிக்கு பிறகு பேசிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், தன்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான ஒரு எதிரணியை நான் பார்த்ததே இல்லை, நான் 2 நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வந்துவிட்டேன் ஆதாரத்தை வெளியிடுவோம் என தெரிவித்து இருந்தார்.
"4th umpire is wrong here" Mathews tweets evidence at ICC https://t.co/3MMKs25w3a
— NewsWire ?? (@NewsWireLK) November 6, 2023
இதற்கிடையில் போட்டியின் நான்காம் நடுவர், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காலதாமதமாக தான் வந்தார் என கருத்து வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்கு சரியான நேரத்தில் களமிறங்கியது தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
வங்கதேச அணியின் செயலானது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆதாரத்தை வெளியிட்டு இருப்பது கூடுதலாக வைரல் ஆகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |