கொழும்பு வன்முறையில் மனித சங்கிலியாக மாறி போராட்டகாரர்களை பாதுகாத்த வழக்கறிஞர்கள்! குவியும் பாராட்டுக்கள்
இலங்கை தலைநகர் கொழும்பில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலியாக மாறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்களை பாதுகாத்தது அனைவரலாலும் பாராட்டுப்பட்டு வருகிறது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்கள் கொழும்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கோட்டபய ராஜபச்ச அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, இன்று கொழும்பில் உள்ள பிரதமர் இல்லதத்தில் பிரதமர் மகிந்தா ராஜபக்ச உடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், பிறகு காலி முகத்திடலுக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கினர்.
இதன் போது இலங்கை வழக்கறிஞர்கள் மனித சங்கிலியாக மாறி, அமைதி வழியில் போராடி வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டகாரர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றனர்.
Current situation at Galle Face. Lawyers were also seen supporting the protesters.#SriLanka #lka
— NewsRadio - TNLRN (@newsradiolk) May 9, 2022
? @tharakaspadukka pic.twitter.com/h73CLI9MAW
இது ராஜபக்சக்களின் முடிவு! கொழும்பு வன்முறை குறித்து சனத் ஜெயசூர்யா காட்டம்
வழக்கறிஞர்களின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் கொழும்பில் வன்முறை வெடித்ததையடுத்து, இலங்கையில் நாடு முழுவதும் மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.