ரிவ்யூ கேட்காத இலங்கை வீரர்கள்.. தப்பித்த தலை!
அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் எல்.பி.டபுள்யூ ஆன போது, இலங்கை அணி வீரர்கள் ரிவ்யூ கேட்காததால் அவர் தனது ஆட்டத்தினை தொடர்ந்தார்.
இலங்கை-அவுஸ்திரேலியாஅணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் செய்து வருகிறது. அவுஸ்திரேலிய அணியின் இடக்கை வீரர் டிராவிஸ் ஹெட் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தீக்ஷனாவின் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
எனினும் அவருக்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இலங்கை வீரர்கள் ரிவியூ வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தவில்லை. பின்னர் டிவியில் பார்த்தபோது அது அவுட் என்று தெரிந்தது.
அவுஸ்திரேலிய அணி 35 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 25 ஓட்டங்களிலும், ஹெட் 13 ஓட்டங்களிலும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
An opportunity missed by Sri Lanka. Head is still there after they didn't review this lbw shout #SLvAUS pic.twitter.com/JfZcEf9adT
— cricket.com.au (@cricketcomau) June 19, 2022