டி20 உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறும் இலங்கை? மழையால் ஏற்பட்ட சிக்கல்
நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இலங்கை அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட போட்டி
இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி ஃபுளோரிடாவில் நடைபெற இருந்தது.
ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இது இலங்கை அணிக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணிக்கு சிக்கல்
ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி 6 புள்ளிகளை பெற்றதால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
இலங்கை அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி கடைசி போட்டியில் பாரிய அளவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வேண்டும்.
The Group D encounter between Sri Lanka and Nepal has been abandoned ?#SLvNEP #T20WorldCuphttps://t.co/oGRJDr3yje
— ICC (@ICC) June 12, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |