ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் மோசடி: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கணினி அவசர தயார் நிலை குழு வெளியிட்ட எச்சரிக்கையில், ஆன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் ஆடர் செய்ய வேண்டும் என கணினி அவசர தயார் நிலை குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
மோசடி குற்றச்சாட்டுகள்
இலங்கை ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற மோசடிகள் நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதாகவும் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
ஆகவே பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |