மாஸ்கோவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: கொல்லப்பட்ட ரஷ்யாவின் உயர்மட்ட ஜெனரல்
மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்யாவின் உயர்மட்ட ஜெனரல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் உயர்மட்ட ஜெனரல் கொலை
திங்கட்கிழமை தெற்கு மாஸ்கோவில் நடந்த திட்டமிட்ட கார் வெடிகுண்டு சம்பவத்தில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ்(56) கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவின் யாசெனவாயா தெருவில் உள்ள கார் பார்க்கிங்கில் நின்ற அவரின் காரின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஃபனில் சர்வரோவ் கொல்லப்பட்டுள்ளார்.
Russian Generals continue exploding back home in Russia, with another today in Moscow. Major General Fanil Sarvarov died this morning at 7am when his car exploded.
— SPRAVDI — Stratcom Centre (@StratcomCentre) December 22, 2025
Responsible for many atrocities, Sarvarov participated in operations during the invasion of Georgia, Chechnya,… pic.twitter.com/iFIewnnNDY
ரஷ்ய ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் பிரிவில் செயல்பாட்டு பயிற்சித் துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கார் குண்டுவெடிப்பு மற்றும் சர்வரோவ் உயிரிழந்த சம்பவத்தை ரஷ்யாவின் விசாரணைக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விசாரணைக் குழுவினர் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த படுகொலை சம்பவம் உக்ரைனிய படைகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |