இந்திய புரோ கபடி லீக் ஏலத்தில் இலங்கை வீரரை தட்டி தூக்கிய தமிழ் தலைவாஸ்! எத்தனை லட்சம் தெரியுமா?
இந்திய புரோ கபடி லீக் (PKL) தொடருக்காக இலங்கை கபடி வீரரும், இலங்கை கடற்படை அதிகாரியுமான அன்வர் சஹீத் பாபாவை தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல்-க்கு அடுத்தபடியாக ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் விளையாட்டுத் தொடர் என்றால் அது புரோ கபடி லீக் தொடர் தான்.
இம்முறையும் வழக்கம் போல், தமிழ் தலைவாஸ் முதல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வரை மொத்தம் 450 வீரர்களுடன் 12 அணிகள் களமிறங்க காத்திருக்கின்றன.
வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள புரோ கபடி லீக்கின் (PKL) எட்டாவது சீசனுக்கான ஏலம் மும்பையில் ஆகஸ்ட் 29-31 வரை நடைபெற்றது.
இந்த வீரர்கள் ஏலத்தில் இலங்கை கபடி வீரர் அன்வர் சஹீத் பாபாவும் பங்கேற்றிருந்தார்.
ஆல் ரவுண்டர் அன்வர் சஹீத் பாபாவின் அடிப்படை விலை 10 லட்சம் ரூபாயாகும்.
அன்வர் சஹீத் பாபா 10 லட்சம் ரூபாய்க்கு புரோ கபடி லீக்கில் விளையாடும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டில் நடக்கும் கபடி தொடரில் விளையாட இலங்கை வீரர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
Namma first purchases of the #VivoPKLPlayerAuction! ??
— Tamil Thalaivas (@tamilthalaivas) August 30, 2021
Anwar Saheed Baba and Mohammad Tuhin Tarafder, welcome to the Thalaivas ??#IdhuNammaAatam pic.twitter.com/dnTzlSLQI0
இலங்கையின் அம்பிலிப்பிட்டியைச் சேர்ந்த அன்வர் சஹீத் பாபா, இந்த ஆண்டு PKL போட்டிக்காக வாங்கப்பட்ட 22 வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார்.