இலங்கை அணி உலகக்கோப்பைக்கு தகுதி! சதமடித்து உறுதி செய்த வீரர்
சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேவை வீழ்த்தியது.
சொதப்பிய தொடக்கம்
உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகள் மோதி வருகின்றன.
புலவாயோவில் தொடங்கிய இன்றைய போட்டியில் ஜிம்பாப்பே முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர் கும்பியே ஓட்டங்கள் எடுக்காமலும், எர்வின் 14 ஓட்டங்களும் எடுத்து மதுஷாங்கா ஓவரில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மாதேவீரே ஒரு ரன்னில் வெளியேறினார். எனினும் சீன் வில்லியம்ஸ், ரஸா இணை நிலைத்து நின்று ஆடினர்.
Sean Williams brings up his fifth fifty-plus score in the #CWC23 Qualifier ?#ZIMvSL: https://t.co/kYQerTkkIx pic.twitter.com/k8AV7MOxo7
— ICC (@ICC) July 2, 2023
சீன் வில்லியம்ஸ் அரைசதம்
இந்த ஜோடியை ஷானகா பிரித்தார். அவரது ஓவரில் ரஸா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீன் வில்லியம்ஸ் 56 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து தீக்ஷணா விக்கெட் வேட்டையாடினார்.
மறுமுனையில் பத்திரனா தாக்குதல் பந்துவீச்சை செலுத்தினார். இதனால் நிலைகுலைந்த ஜிம்பாப்பே அணி 32.2 ஓவர்களில் 165 ஓட்டங்களில் சுருண்டது. தீக்ஷணா 4 விக்கெட்டுகளும், மதுஷன்கா 3 விக்கெட்டுகளும், பத்திரனா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ICC
இலங்கை வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 33.1 ஓவர்களிலேயே 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் பதும் நிசங்கா பவுண்டரி அடித்து சதம் விளாசியதுடன், இலங்கை அணியின் வெற்றியை நிலைநாட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உலககோப்பைக்கு தகுதி பெற்றது. குவாலிபையரில் தோல்வி இல்லாமல் வீறுநடை போட்டுவந்த ஜிம்பாப்பே அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
Pathum Nissanka smashes a century and gets the job done! ??#LionsRoar #SLvZIM #CWC23 pic.twitter.com/EPVy7Xdm92
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 2, 2023
Sri Lanka are #CWC23 bound ??? pic.twitter.com/DfV6N7TSKY
— ICC (@ICC) July 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |