சுழற்பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் வாண்டெர்செ மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை-அவுஸ்திரேலியாஅணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் செய்து, 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 70 ஓட்டங்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 62 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 49 ஓட்டங்களும் விளாசினர். இலங்கை வீரர் வாண்டெர்செ பந்துவீச்சில் ஓட்டங்கள் எடுக்க அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர்.
Australia 117/3 after 25 overs.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2022
Any Predictions for the final score?#SLvAUS pic.twitter.com/ANZ6rZPg5a
பின்ச், கேரி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அவரது சுழலில் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்கள் வீசிய வாண்டெர்செ 49 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சமீரா, டி சில்வா மற்றும் வெல்லலாகே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Labuschagne and Finch departs. AUS on 150/4 (32 ovs) #SLvAUS pic.twitter.com/yXBi7uqxp7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2022
A late flurry of runs helps Australia to 291/6.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2022
Stay tuned for Sri Lanka's chase!#SLvAUS pic.twitter.com/WtvDcKUqDf