பிரித்தானியாவில் தூக்க பிரச்சனையில் இருந்த பெண் துஷ்பிரயோகம்! உள்ளாடை டிஎன்ஏ-யினால் சிக்கிய நபர்
பிரித்தானியாவில் தூக்கப் பிரச்சனை கொண்ட பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூக்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்
மேற்கு லண்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு பெண்ணொருவர் அவரது நண்பர்களுடன் கிளப் ஒன்றில் கெமலேட்டின் கர்ட் என்பவரை சந்தித்தார். அவர்கள் அனைவரும் விருந்துக்கு சென்றுள்ளனர்.
தூக்கப் பிரச்சனை உள்ள குறித்த பெண்ணை ஓர் அறையில் அவரது நண்பர்கள் தங்க வைத்துள்ளனர். அப்போது கர்ட் அப்பெண்ணின் அறைக்குள் நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த பெண் தூக்கத்தில் இருந்தபோது தாக்கப்பட்டதாக உணர்ந்துள்ளார்.
டிஎன்ஏ-யினால் சிக்கிய நபர்
அதன் பின்னர் இதுதொடர்பாக நண்பர்களிடம் கூறிய அவர் பொலிஸாரிடமும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பில் Met பொலிஸின் Sapphire குழு விசாரணையை துவங்கியது.
குறித்த பெண்ணின் உள்ளாடையில் கர்ட்டின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கர்டிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் வைக்கப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |