நேரலை டி.வி விவாதத்தின் போது பாஜக தலைவரை செருப்பால் அடித்த JAC உறுப்பினர்! ஏதற்காக? வைரலாகும் வீடியோ
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் டி.வி நேரலை விவாதத்தின் போது நபர் ஒருவர் பாஜக தலைவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமராவதியில் ABN Andhrajyothi தொலைக்காட்சியில் நடந்த நேரலை விவாதத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
குறித்த நேரலை விவாதத்தில் அமராவதி Parirakshana Samithi JAC உறுப்பினர் கோலிகாபுடி சீனிவாச ராவ் மற்றும் பாஜக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ் விஷ்ணு வர்தன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது ராவ்-ரெட்டி இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ராவ் தனது செருப்பை கழட்டி ரெட்டி மீது வீசினார்.
விவாதத்தின் போது பாஜக தலைவர், முக்கிய மூலதன பிரச்சினை தொடர்பாக ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டங்களை நடத்தி வரும் அனைத்து அமராவதி விவசாயிகளையும், போராட்டக்காரர்களையும் ‘paid artist’ அழைத்தால், கோபமடைந்த ராவ் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
Full Nataka! BJP leader Vishnuvardhan Reddy gets into a heated debate with Amaravati JAC leader Srinivas Rao- ends with Srinivas Rao hurling his slipper at the BJP leader pic.twitter.com/FkCmkyIJyd
— Akshita Nandagopal (@Akshita_N) February 24, 2021
இந்த துரதிர்ஷ்டமான நிகழ்விற்காக டி.வி தொகுப்பாளர் மன்னிப்பு கோரினார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநில பாஜக தலைவர் Somu Veerraju, ராவ் மீது புகார் அளிக்குமாறு தொலைக்காட்சியிடம் வலியுறுத்தியுள்ளார்.