ஒவ்வொரு தமிழனின் இதயமும் நொறுங்கியது, மகிழ்ச்சியுடன் இருங்கள்: குஷ்பு டுவிட்
ரஜினியின் அரசியல் முடிவால் ஒவ்வொரு தமிழரின் இதயமும் நொறுங்கியுள்ளது என தெரிவித்துள்ளார் நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பு.
தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்தார் ரஜினிகாந்த்.
இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு, "அன்பார்ந்த ரஜினிகாந்த், உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை, நலனை விட எதுவும் பெரிதல்ல என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் நல விரும்பியாக, தோழியாக உங்கள் முடிவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் விசேஷமான, முக்கியமான நபர். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் இருங்கள்" என கருத்து தெரிவித்துள்ளார்.
Dear @rajinikanth sir, your decision breaks every Tamilians heart. But I truly understand nothing more matters than ur health n well being. I as ur well wisher n a friend,will stand by your decision. You are precious n a very important person to me. Take care n stay happy. ❤️??❤️
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 29, 2020