ரஷ்ய ஆதரவால் கடும் நெருக்கடி: பதவி விலக மறுக்கும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ தனது பதவி விலகலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
தேர்தல்கள் நடந்தால் மட்டுமே
ரஷ்யாவுக்கு ஆதரவாக அவரது அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்திற்கு எதிராகவே பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் பிராடிஸ்லாவாவில் சுமார் 60,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ஆனால் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடந்த பேரணிகளில் மொத்தம் சுமார் 100,000 பேர் கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. 2023 ல் ஃபிகோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவென்றே கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க ஃபிகோ மாஸ்கோவிற்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்ததை அடுத்தே இந்த எதிர்ப்புக்கள் வெடித்தன.
2022 ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதமர் ஒருவர் முன்னெடுத்த அரிய சந்திப்பு அதுவென்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் தமது அரசாங்கத்திற்கு எதிராக வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பதிலளித்த பிரதமர் ஃபிகோ,
அடையாளம் தெரியாத நிபுணர்கள்
மக்கள் ஆர்ப்பாட்டங்களால் அல்ல, தேர்தல்கள் நடந்தால் மட்டுமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றார். மட்டுமின்றி, முற்போக்குவாதிகள் தமது அரசாங்கத்தை சட்டவிரோதமாக கவிழ்க்க போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஃபிகோவின் இடதுசாரி-தேசியவாத நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் பொதுமக்கள் குழுக்களும் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. மட்டுமின்றி, உளவுத்துறை தமக்களித்த தகவல் என குறிப்பிட்ட பிரதமர் ஃபிகோ,
2014ல் உக்ரைனிலும், கடந்த ஆண்டு ஜார்ஜியாவிலும் ரஷ்ய ஆதரவு தலைவர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஸ்லோவாக்கியாவில் அடையாளம் தெரியாத நிபுணர்கள் குழு உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சிலரை நாடுகடுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |