உக்ரைனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்... சீறும் ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
ரஷ்ய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் முடக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என ஸ்லோவாக்கியா பிரதமர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இழப்பை ஏற்படுத்தும் செயல்
ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி ஆணையர் டான் ஜோர்கென்சனுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ இதை தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா உடனான எரிவாயு ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ஸ்லோவாக்கியாவுக்கு இழப்பை ஏற்படுத்தும் செயலில் உக்ரைன் ஈடுபடுவதாக ஃபிகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனுக்கான அவசர மின்சார விநியோகங்களை துண்டிப்பதன் மூலம் பழிவாங்க இருப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார். அத்துடன் உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் நிறுத்தப்போவதாகவும்,
உரிய முடிவெடுக்கப்படும்
அல்லது உக்ரைன் பிரச்சினைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களின் வீட்டோ உரிமையைப் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கொந்தளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பதட்டங்களை அதிகரிக்க தமது அரசாங்கம் விரும்பவில்லை என்றும், தீர்வு காணப்படாவிட்டால் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும் என்றும் ஃபிகோ தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகத்தை உக்ரைன் முடக்கியுள்ளதால் ரஷ்யாவிடம் இருந்து ஆண்டுக்கு 516 மில்லியன் டொலர் வருவாயை இழப்பதாகவும், அதேவேளை அதிக எரிவாயு கட்டணமாக 1 பில்லியன் யூரோ செலவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக ஃபிகோ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையம் உறுதி அளித்துள்ளதாகவே ஃபிகோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |