இலங்கை ஆளும் கட்சி எம்.பி-க்கள் சனத் நிசாந்த, மிலான் ஜயதிலக்க கைது!
இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி-க்கள் சனத் நிசாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சிஐடி அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
மே 9ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
முன்னதாக,கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் கூட்டத்தில் எம்.பி சனத் நிசாந்தவும் இருந்ததாக கூறப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் வெளியாகின. குண்டர்கள் கூட்டத்தில் சனத் இருந்ததாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அவரது இல்லம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த சிஐடி அதிகாரிகள் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி-க்கள் சனத் நிசாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஆயுதங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!