பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் விபத்து: சம்பவ இடத்தில் குவிந்த மீட்பு படையினர்
பிரித்தானியாவில் சிறிய ரக விமான ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரில் விமான விபத்து
செவ்வாய்க்கிழமை காலை சிறிய Cirrus SR20 ரக விமானம் ஒன்று லிட்டில்பரோ பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய பாராசூட் வசதி கொண்டது, சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில் விமானத்தின் மஞ்சள் நிற பாராசூட் மின் கம்பத்தின் மீது சிக்கியிருப்பதை பார்க்க முடிகிறது.

அத்துடன் இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தில் 2 பேர் வரை இருந்ததாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து காலை 9:59 மணிக்கு புறப்பட்ட விமானத்தின் சிக்னல் காலை 10.39 மணியளவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரம்
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் விசாரணைகளுக்காக விபத்துக்குள்ளான பகுதியை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |