உக்ரைன் தலைநகரில் சிறிய அணுகுண்டு வீசப்பட்டதா?: வெளியாகியுள்ள அதிரவைக்கும் காட்சி
இதற்கு முன் உலகப் போர்களில் அணுகுண்டு வீசப்பட்ட காட்சிகளை வீடியோக்களில் பார்த்திருப்போம். அதற்கொத்த ஒரு காட்சி உக்ரைன் தலைநகரில் அரங்கேறியுள்ளது.
அதிகாலை 2.00 மணியளவில், Kyiv நகரில் சிறிய அணுகுண்டு ஒன்று வீசப்பட்டது போல் தோன்றும் ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
அந்த குண்டு வெடித்ததால் வெகு தூரத்துக்கு அந்த ஒளி பரவுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
அத்துடன், CBS தொலைக்காட்சி செய்தியாளர்கள் Kyivஇல் செய்தி சேகரித்து முடித்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிக்கும் காட்சி ஒன்று அவர்களது கமெராவில் சிக்கியுள்ளது.
வெடிகுண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் ஒளியை அந்த வீடியோவில் காணமுடிவதுடன், தொலைவில் வெடிக்கும் அந்த வெடியின் தாக்கத்தால் செய்தி சேகரிக்கும் நிருபரும் அவரது குழுவினரும் அதிர்ச்சியடைவதையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
Biggest blasts we've ever seen, just as we were coming off air tonight in #Kyiv #cbsnews @charliecbs @cbsnews pic.twitter.com/leIfTrdnXx
— Justine Redman (@redmanjustine) March 3, 2022