பிரித்தானியாவில் விமான நிலையத்தில் அதிரடி சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட ரப்பர் படகுகள்
Small Boat Seizure At Uk East Midlands Airport: பிரித்தானியாவில் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிரம்மாண்ட ரப்பர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
படகுகள் பறிமுதல்
பிரித்தானியாவின் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிரம்மாண்டமான ரப்பர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ரப்பர் படகுகள் ஆங்கில கால்வாய் வழியாக கிட்டத்தட்ட 1700 அகதிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் பெற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ம் திகதி தேசிய குற்ற தடுப்பு பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுக் குழுக்கள் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

துருக்கில் இருந்து நெதரலாந்திற்கு விமான சரக்கு மூலம் அனுப்பப்பட்டு கொண்டிருந்த இந்த படகுகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த ஒவ்வொரு படகும் சுமார் 9 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் ஒவ்வொரு படகிலும் சுமார் 68 பேர் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைக்க முடியும் என்று புலனாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய கடத்தல் முயற்சிகளை ஏற்கனவே பிரித்தானியா தடுத்து நிறுத்தி இருந்தாலும், வணிக ரீதியான விமான சரக்குகள் மூலம் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.