பாதுகாப்பு கவசம், கேமராவுடன்.,மெக்சிகோ ராணுவத்தில் இணைந்த 13 மாத குட்டி நாய்
Small Chihuahua dog joins Mexico National Guard: மெக்சிகோவின் தேசிய பாதுகாப்பு படையின் நேஷனல் கார்டில் சிறிய நாய் ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.
தேசிய ராணுவ படையில் 13 மாத குட்டி நாய்
வெறும் 7 கிலோ எடையும் 21 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட சிறிய சிஹுவாஹுவா(Chihuahua) நாய் மெக்சிகோவின் தேசிய பாதுகாப்பு படையின் நேஷனல் கார்டிலில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
13 மாத இந்த குட்டி நாய் அதிகாரிக்கு கமாண்டோ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்களை போல கமாண்டோவிற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தற்காப்பு கண்ணாடிகள், ஹெல்மெட், பாதுகாப்பு உடைகள், சிறிய கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

கமாண்டோ என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், வெறும் விளம்பரத்திற்காக பாதுகாப்பு படையில் இணைக்கப்படவில்லை. மாறாக மெக்சிகோவில் சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பெரிய நாய்களுக்கு இணையாக கமாண்டோவும் படிகள் ஏறுவது, தடைகளைத் தாண்டுவது போன்ற கடுமையான பயிற்சிகளை சுறுசுறுப்பாக செய்து முடித்துள்ளது.
கமாண்டோ என பெயரிடப்பட்டுள்ள குட்டி நாய், எதிர்காலத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் மற்றும் மீட்புப் பணிகளில் பயன்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கமாண்டோ நாய் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வடக்கு மெக்சிவோவில் உள்ள சிஹுவாஹுவா மாகாணத்தில் உள்ள முதிய தம்பதியினரிடம் இருந்து நேஷனல் கார்டு படையினர் தத்தெடுத்தனர்.
தற்போது மெக்சிகோ தேசிய படையில் 350க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.