சிறிய பிழை, 15 மில்லியன் தடுப்பூசிகள் சேதம்: அமெரிக்க தடுப்பூசி திட்டத்தில் விழுந்த இடி! என்ன நடந்தது?
அமெரிக்காவில் 15 மில்லியன் ஒற்றை டோஸ் தடுப்பூசிகள் பாழடைந்தள்ளது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த ஒற்றை-ஷாட் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் சுமார் 15 மில்லியன் டோஸ் அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலை பிழையில் பாழடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியை விரைவாக உயர்த்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுக்கும், அமெரிக்காவின் தடுப்பூசி திட்டத்துக்கும் இது ஒரு பெரிய அடி என கூறப்படுகிறது.
Baltimore-ல் Emergent BioSolutions மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இது நடந்துள்ளது.
மருந்தில் கலப்படவேண்டிய ஒரு முக்கிய மூலப்பொருளின் அளவில் சற்று மாற்றம் ஏற்பட்டதால், அதன் தரத்தை அது பூர்த்தி செய்யவில்லை என்றும், அந்த குறிப்பிட்ட அளவு மருந்துகளை மட்டும் நிரப்பப்படுவதற்கு முன்னரே தடை செய்து விட்டதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசியின் அனைத்து உற்பத்தியையும் மேற்பார்வையிடவும், உறப்த்தியில் ஆதரிக்கவும், Baltimore தளத்திற்கு அதிக நிபுணர்களை அனுப்புவதாக ஜான்சன் & ஜான்சன் கூறியுள்ளது.
மேலும், இழப்பை ஈடுகட்ட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 24 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை வழங்க ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி அதன் Single-shot கொரோனா தடுப்பூசிக்காக பெரிதும் பாராட்டப்படுகிறது.
மேலும் மாடர்னா மற்றும் ஃபைசரின் தடுப்பூசிகளைப் போல், இதனை உறையவைக்கத் தேவையில்லை - இது விநியோகத்தை மிகவும் எளிதாக்குகிறது.

