தரையிறங்கும் போது பயணிகள் விமானத்தில் மோதிய விமானம் - பயணிகளின் நிலை?
அமெரிக்காவில் தரையிறங்கும் போது, விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தரையிறங்கும் போது மோதிய விமானம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து Socata TBM700 Turboprop என்ற சிறிய ரக விமானம், ஒரு விமானி மற்றும் 3 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த விமானம், நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு மோண்டோனோவின் காலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றின் மீதும் மோதியது.
இதன் காரணமாக விமானத்தில் பற்றிய தீ, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற விமானங்களுக்கு பரவி, பெரும் கரும்புகை எழுந்தது. உடனடியாக விமான நிலைய மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர்.
🚨🇺🇸 BREAKING: MID-AIR DISASTER ON THE GROUND IN MONTANA
— Mario Nawfal (@MarioNawfal) August 11, 2025
2 planes collided at Kalispell Airport, erupting into a massive fireball.
Details on casualties are still unknown, but rescue crews are flooding the scene in a major emergency response.
Source: @nicksortor pic.twitter.com/wf7CH0gslR
இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த இரு பயணிகள் மட்டும் சிறிய காயமடைந்தனர். தற்போது சிகிச்சைக்காக விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில், பயணிகள் யாரும் இல்லாததால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக, அமெரிக்கா விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |