நெடுஞ்சாலையில் காரின் மீது தரையிறங்கிய விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரின் மீது தரையிறங்கிய விமானம்
திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள முக்கியமான நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் போது சிறிய ரக விமானமானது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டொயோட்டா கேம்ரி 2023(Toyota Camry) காரின் மீது மோதி தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
A driver of a car suffered minor injuries after a plane crashed into it as it landed on Interstate 95 in Brevard County, according to the Florida Highway Patrol.
— Spectrum News 13 (@MyNews13) December 9, 2025
Get more here: https://t.co/nDpsGf0dEs pic.twitter.com/PD4UDIpxYb
மெரிட் தீவில்(Merritt island), I-95 இண்டர்ஸ்டேட் நெடுஞ்சாலையில் மாலை 5.45 மணிக்கு இந்த விபத்து சம்பவமானது அரங்கேறியுள்ளது.
விமானத்தின் விமானி பீச்கிராஃப்ட் 55 (Beechcraft 55) ரக விமானத்தில் இஞ்சின் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து அமெரிக்க பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழப்புகள் இல்லை

அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளுக்கும் எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினர்.
டொயோட்டா கேம்ரி காரை ஓட்டிச் சென்ற 57 வயது பெண் ஓட்டுநர் மட்டும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |