அலாஸ்காவில் ஏரிக்குள் பாய்ந்த விமானம்: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அலாஸ்காவில் ஏரிக்குள் விழுந்த விமானம்
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள செல்டோவியா(Seldovia) கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள கடல்நீரேரிப் பகுதியில் (tidal lagoon) பைப்பர் PA-24 (Piper PA-24) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட விமானம் புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சரேஜ் நகரில் உள்ள மெரில் ஃபீல்டு விமான நிலையத்தில் இருந்து செல்டோவியா உள்ளூர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கிட்டத்தட்ட 17 அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் அதில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரம்
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் அலாஸ்கா மாநில காவல்துறையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முயற்சி செய்தனர், ஆனால் அதிகமான ஆழம் மற்றும் விமானம் நீருக்குள் மூழ்கி இருந்ததால் அவர்களால் எந்தவொரு தீவிரமான முயற்சிகளையும் செய்ய முடியவில்லை.
மாலை 6 மணியளவில் மீட்புக் குழுவினர் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த 4 பெரியவர்களின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |